வேலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் தாசில்தார் இடமாற்றம் பேரணாம்பட்டு தாசில்தாராக பணிபுரிந்த நெடுமாறன் குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக நேர்முக உதவியாளராகவும், அங்கு பணிபுரிந்த கலைவாணி கே. வி. குப்பம் (பொறுப்பு) தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த கீதா வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலக நேர்முக உதவியாளராகவும், அங்கு பணிபுரிந்த சுரேஷ்குமார் பேரணாம்பட்டு (பொறுப்பு) தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி தாசில்தாராக (நிலஎடுப்பு) பணிபுரிந்த சித்ராதேவி குடியாத்தம் (பொறுப்பு) தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த விஜயகுமார் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனிதாசில்தாராகவும் (நிலஎடுப்பு) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பிறப்பித்துள்ளார். புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தார்களும் உடனடியாக சேர வேண்டும். இல்லையென்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். பணியிட மாறுதல் குறித்து மேல்முறையீடோ அல்லது விடுப்பு விண்ணப்பமோ ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment