வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஒன்றிய அரசின் மனுவாத திட்டமான விஷ்வகர்மா யோஜனா திட்டத்தை உடனடியாக கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாதிக்கு ஒரு தொழில் ஒன்றிய அரசின் மனுவாத திட்டமான விஷ்வகர்மா யோஜனா திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர் -திருப்பத்தூர் மாவட்ட குழு சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் 22/9/23 மாலை 5 மணி அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை தோழர் பி காத்தவராயன், மாவட்ட செயலாளர் தோழர் வே.குபேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் மண்டல தலைவர் மறைமலை வேதாச்சலம், நகர செயலாளர் கே குமரேசன், விவேக், சரண், மேல்பட்டி செழியன், கல்லப்பாடி தமிழரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா.சிவா, மோகன் வழக்கறிஞர் பூ பாலகுமாரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே சாமிநாதன் பி குணசேகரன் எஸ் சிலம்பரசன் சி சரவணன் என் பாபு ஐ கார்த்திகேயன், தோழர் செம்மலர் மாதர் சங்கம் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment