வேலூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 48 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது கேகேநகர்.இப்பகுதிமுழுவதும் உள்ள தெருக்கள் மற்றும் முக்கிய சாலையில் தற்போது வரை மாநகராட்சியின் சார்பில் முறையான சாலை அமைக்கப்படாததால் அந்த பகுதிமுழுவதும்கரடுமுரடாக காட்சியளிக்கிறது.
மேலும்மழைக்காலங்களில் சேரும் சகதியுமாய் சாலைகள் காட்சி அளிப்பதால் வாகனத்தில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரும் பயன்படுத்தமுடியாதசூழல் நிலவுவதாகவும். காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரி செல்வோர் பணிக்குசெல்வோர் உட்பட அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சிலசமயங்களில் வாகனத்தில் இருந்து கீழே விழுவதால் பலருக்குகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தப்பகுதியில்வசிக்கும் பொது மக்களுக்கு அல்லது வைக்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு மருத்துவ அவசரகாலத்தில்ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் உள்ளே வர மறுப்பதால் மிகுந்தசிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஆகவே தங்களுக்கு விரைந்து தரமான சாலை மற்றும் கால்வாய் வசதி அமைத்துக்கொடுக்க வேண்டும் என கே கே நகர் பகுதி மக்கள் கோரிக்கை.
இவையெல்லாம் மாற வேண்டுமென்றால் உடனடி சாலை வசதி கழிவு நீர் கலக்காத குடிநீர் கொசுக்களின் பயமுறுத்தல் இல்லாதசாக்கடைகால்வாய் இதை உடனடியாகசெய்து தர வேண்டும்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment