காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மாலையில் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜே.கே.தாமஸ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை கோ.சரளா முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.
பள்ளி கட்டிட குழு உறுப்பினர் கோ.லோகநாதன் பள்ளியின் தலைமையாசிரியர் கோ.சரளா, தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது.. நான் மாணவனாக இருந்த போது எனது ஆசிரியர் எனக்கு அளித்த வழிகாட்டுதல்களை இன்று வரை கடைபிடித்து வருகிறேன்.
எனது முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் தான் காரணம். ஆசிரியர்கள் தரும் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளவை. காட்பாடியில் உள்ள இந்த அரசு மகளிர் பள்ளி கடந்த கல்வி ஆண்டில் 90 சதவிகிதம் தேர்ச்சி விழுக்காடு அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது கல்வித்தரம் உயர உழைத்து வரும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு இனி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் மகேந்திரன் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். உறுப்பினர்கள் பாலாஜி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் டி.சங்கரி, வி.ராஜேஸ் கிளித்தான் பட்டரை நந்தகுமார், உள்ளிட்டோர் வாழ்தி பேசினர். உதவித்தலைமையாசிரியைகள் நிவேதிதா,(மேல்நிலை) கே.திருமொழி(உயர்நிலை) பி.ரோசலின்பொன்னி(இடைநிலை) ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
முடிவில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் எஸ்.கலைச்செல்வன் நன்றி கூறினார். முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர்களை மாணவிகள் ரோஜா கொத்துகளை வழங்கி வரவேற்றனர். ஆசிரியர்கள் இனிப்புகளை மாணவிகளுக்கு வழங்கி மகிழ்சியை தெரிவித்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment