திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 September 2023

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். தேர்வு முடிவுகளை முறையான நேரத்தில் தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். பணியிடங்களை நிரப்ப வேண்டும் வெளியிட வேண்டும். மறு கூட்டல் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்களுக்கான காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து துணைவேந்தர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:

Post a Comment

Post Top Ad