வேலூர் மாவட்டம் குடியாத்தம் தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை சார்பில் நகர மன்ற தலைவரிடம் ஊராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைத்து கொடிகாத்த குமரன் பெயர் சூட்டி பின்வரும் சந்ததியினருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறுவர் பூங்கா அமைத்து தர மனு அளித்தனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி தன் உயிரை பறிகொடுக்கும் தருவாயிலும் தேசிய கொடியை கீழே போடாமல் பாதுகாத்து பெருமை சேர்த்த கொடிக்காத்த குமரன் அவர்களின் பெயரில் நம் குடியேற்றம் நகரில் நகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா ஒன்றை அமைத்து அவரின் சுதந்திரப் போராட்ட தியாக வாழ்க்கைக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், வருங்கால இளைய தலைமுறையினர் இவரது தியாக வாழ்க்கை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும், என்று தமிழ்நாட்டில் இரண்டாவது சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் விருதும் பாராட்டும் பெற்ற குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சௌந்தர்ராசன் அவர்களை சந்தித்து தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் அதன் மாநில தலைவர் பொ.கார்த்திகேயன், மாநில பொருளாளர் வே.வினாயகமூர்த்தி வேலூர் மாவட்ட தலைவர் ப.ஜீவானந்தம் சமூக ஆர்வலர் வி. சடகோபன் ஆகியோர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment