வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் புது மனை பகுதியைச் சேர்ந்த தாவூத் என்பவரின் மகன் இம்ரான் (வயது 26 )இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார், கடந்த சில ஆண்டுக்கு முன் இவரை கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த இவர் மீண்டும் கஞ்சா தொழில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று ஒரு நபர் கத்தி,எடுத்து இம்ரான் இடுப்பு பகுதியில் குத்திய மா்ம நபா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் கத்தி குத்துப்பட்ட இம்ரான் உடனே அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர், ராமமூர்த்தி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment