கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் தலைமையிடத்து துனை வட்டாச்சியா் தேவி, நகராட்சி உதவியாளர் ராம்குமார், பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் சிவகுமார், நில அளவையர் முரளி, வட்ட வழங்கல் அலுவலக ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
விவசாயிகள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், போஜனாபுரம் ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், போஜனாபுரம் பொதுமக்கள் செல்ல வழியை அளவீடு செய்து தர வேண்டும், வனவிலங்குகளால் உயிர் சேதம் பயிர் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும், 100 நாள் பணியாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை வாழை குழிகள் வெட்ட 100 நாள் பணியாளர்களை அமர்த்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள் அதிகாரிகள் ஆவண செய்வதாக உறுதி அளித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்


No comments:
Post a Comment