ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 September 2023

ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.


வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வெளிசந்தை (Contract Basis through OutSourcing HR Ageney) மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஒரு கணினி ஆய்வாளர் மாவட்ட மேலாண்மை அலகிற்கு பணியிடம் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்ததலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வெளிசந்தை (Contract Basis through OutSourcing HR Agency) மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஒரு கணினி ஆய்வாளர் மாவட்ட மேலாண்மை அலகிற்கு பணியிடம் நிரப்புவதற்கு கீழ்காணும் நிபந்தனைகளை அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


1.கணினி ஆய்வாளர் (MIS ANALYST|தகுதிகள்:

  1. வயது 01.07.2023 அன்று 30 வயதுக்குள் இருக்கவேண்டும். 
  2. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி (BE or B-Tech. in Computer Science/ IT/ Computer Application/ Master of Computer Application/ Master in Science (M.Sc..) Computer Application/ Master Science in Computer/ ) மற்றும் கணிணி (M.S.Office)
  3. குறைந்தபட்சம் 3 வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  4. திறந்த மூல மென்பொருளில் நிரலாக்க அனுபவம், தரவுத்தள மேம்பாட்டில் கருவிகள் மற்றும் பயன்பாடுகள் அனுபவம் மற்றும் எக்செல் (Excel) சிறந்த தரவு பகுப்பாய்வு அனுபவம் புரிந்திருக்க வேண்டும். (Software/ Hardwar &Excel)


மேற்காணும் விவரப்படி தகுதிகளையுடைய விண்ணப்பதாரர்கள் சுய விவரக் குறிப்பு (Bio-Data) மற்றும் கல்வி சாண்றிதழ் (Certificate Xerox) நகல்களுடன் விண்ணப்பங்களை திட்ட இயக்குநர்/ இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், வேலூர் அவர்களிடம் 22.09.2023 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சித்ததலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad