4 நாட்களாக மாநகராட்சி கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாடுகள். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 September 2023

4 நாட்களாக மாநகராட்சி கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாடுகள்.

வேலூர் மாவட்டம் வேலூருக்கு கடந்த 17ம் தேதி முதல்வர் வருகைதந்ததால் வேலூர் பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலையில் சுற்றித்திருந்து கொண்டிருந்த சுமார் 8 மாடுகளை வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிவறை கட்டிடத்தில் அடைத்து பூட்டு போட்டு வைத்துள்ளதாகவும் கடந்த 4 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி மாடுகள் தவித்து வருவதாக பொது மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.


இதுவரை மாடுகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை என்றும், தனியார் கோசாலைகள் இவற்றை வாங்க மறுப்பதால் அடுத்து என்ன செய்வது என ஆணையரை கேட்டு முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல். போதிய ஆகாரம் இல்லாததால் மாடுகள் மெலிந்து சோர்வுடன் காணப்படுகிறது. மேலும் தண்ணீருக்காக ஒரு மாடு மற்றோரு மாட்டின் பால்மடியை தேடும் கொடுமையான காட்சி நம்மை உருகச்செய்கிறது.


உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களின் சார்பில் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் சார்பில் அரசு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ

No comments:

Post a Comment

Post Top Ad