வேலூர் காட்பாடியில் பஸ் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 September 2023

வேலூர் காட்பாடியில் பஸ் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து.


வேலூர் காட்பாடியில் இருந்து அரசு டவுன்பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் புதிய பஸ்நிலையம் நோக்கி சென்று கோவிலில் இருந்து எதிர்திசையில் (ராங்ரூட்) வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.

வேலூர் பாலாறு பழைய மேம்பாலத்தில் வந்தபோது செல்லியம்மன் கோவில் அருகே விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து அதில் பயணம் செய்த 4 பேர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த வேலூர் போக்குவரத்து போலீசார், வடக்கு போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஆட்டோ அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் பாலாறு மேம்பாலத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இனபராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad