வேலூர் காகிதபட்டறையில் உள்ள உழவர் சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த காய்கறி பழங்கள் பூக்கள் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது உள்ள உழவர் சந்தை கட்டிடத்தில் புதிய வசதிகள் இல்லாததால் பழைய உழவர் சந்தை கட்டிடங்கள் இடிக்க பட்டது.
புதியதாக கட்டிடங்கள் கட்ட ரூ. 46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் இருக்கும் பணி தொடங்கியது. இடிக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களில் மின்விளக்குகள், போர்வெல்கள் ஆழப்படுத்துதல், புதியதாக கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது என உழவர் சந்தை அலுவலர் கிரிதரன் தெரிவித்தார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்

No comments:
Post a Comment