வேலூரில் உணவக சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 September 2023

வேலூரில் உணவக சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழப்பு!

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தனியார் (அருண்) உணவகத்தின் பின் பக்கம் சமையல் அறையாக உள்ள கட்டிடத்தின் சுவர் சேதம் அடைந்துள்ளதால் அதனை சீரமைக்கும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பெண்
ஒரு ஆண் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.


தகவலறிந்து விரைந்து வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரை மீட்டனர். இதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் மற்ற இருவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வேலூர் வடக்கு காவல் விபத்து குறித்து வழக்குப்பதிவு  உணவகத்தை தற்காலிகமாக மூடி உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்கள் இன்று புதியதாக கூலி வேலைக்கு வந்ததால் அவர்களின் முகவரி குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இனபராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad