வேலூர் அரசு மருத்துக் கல்லூரியில் சிறந்த மருத்துவ சேவையாற்றி வரும் மருத்துவ டீன் அவர்களுக்கு தி நேஷனல் வெல்பர் அசோசியேசன் சார்பில் பாராட்டு.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பேராசிரியர் டாக்டர்.எஸ்.பாப்பாத்தி.,MD.,(PATH) DCH., அவர்களை நேரில் சந்தித்து வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் மேல்விஷாரத்தில் இருந்து செல்லும் கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை நோயாளிகள், விபத்து ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக செல்பவர்கள் குறிப்பாக அசோசியேஷன் சார்பில் அனுப்பப்பட்ட ஒரு நோயாளிக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீம் அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கி வரும் வேலூர் அரசு மருத்துவமனையின் சேவையை பாராட்டி டீன் அவர்களுக்கு சால்வை போர்த்தி வாழ்த்தி நன்றி தெரிவிக்கப்பட்டது. அப்போது உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்.டி.ரவிச்சந்திரன் M.B.B.S.,DCH., அவர்களும், மேலாளர் ஜீவானந்தம் அவர்களும் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment