வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகரை சேர்ந்தவர் ஐடி ஊழியர் பாலாஜி (வயது 42). பாலாஜி கடந்த மூன்றாம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி விட்டு மிளகாய்பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உஷாராணி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வேலூர் DSP திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. பாலாஜியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் வெங்கடேஷ் (40) என்பவர்
முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பாலாஜி வீட்டின் பீரோவில் இருந்து 50 பவுன் நகையை திருடியதும், அவற்றை திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருப்பதும், வேலை சரியாக இல்லாததால் உறவினர்கள் தன்னை மதிக்கவில்லை எனபதால் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் வெங்கடேஷை கைது செய்து நகையை மீட்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment