வேலூர் மாவட்டம் காட்பாடியில் பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. அந்த சிலைகள் கரைக்கப்பட இருப்பதை ஒட்டி காட்பாடியில் விநாயகர் விஜர்சன செய்யவதற்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். முன்னதாக பூங்காவனம் இந்து முன்னணி நகர செயற்குழு உறுப்பினர் அவர்கள்100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பெஷீட், பாய் மற்றும் தலையணை 700க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காட்பாடி பகுதியில் நடந்த ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 100 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment