வேலூர் மாவட்டம் 53வது வார்டு பகுதியில் மக்கும் குப்பை மக்கா குப்பை வங்கி திறப்பு விழா நடைபெற்றது, இதில் 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரோட்டரி சங்கம் பிரசிடெண்ட் பாபி கதிரவன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக பாகாயம் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு அவர்கள் கலந்து கொண்டு மக்கும் குப்பை மக்கா குப்பை காண உபகரணங்கள் குப்பைத்தொட்டி துணி பை துப்புரவு பணியாளர்களுக்கான கையுறை மின்சார குப்பை வண்டி செடிகளை வெட்டும் இயந்திரம் மரம் நடுவதற்கான துளை போடும் இயந்திரம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.
மற்றும் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் காஞ்சனா அறிவழகன் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ ரோட்டரி சங்கத்தின் மகளிர் அணி செயலாளர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் பாக்யராஜ் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாபி கதிரவன் கூறுகையில் ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு குப்பைத்தொட்டி வழங்கப்பட்டது. ஒன்று மக்கும் குப்பை இன்னொன்று மக்கா குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும் குப்பை வங்கியில் ஒரு கிலோ மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து கொடுத்தால் ஒரு கிலோவிற்கு பத்து ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். முடிவில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment