காட்பாடி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 8 October 2023

காட்பாடி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக திருவலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த சூர்யா(வயது 25) என்ற வாலிபரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

மேலும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1. 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் சூர்யாவை வேலூர் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே விருதம்பட்டு மற்றும் திருவலம் காவல் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad