வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உடைக்கும் நிலையில் வாகனங்கள் வேலூர் மாவட்டம் ஆயுதப்படை நேதாஜி ஸ்டேடியம் மைதானத்தில், வாகனங்களின் உரிமையாளர்கள் உரிமை கோரிய வாகனங்களை தவிர்த்து மீதமுள்ள வாகனங்களை பொது ஏலம் விடப்பட உள்ளது. வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ. 100/- நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.
ஏலத்தொகையுடன் இரு சக்கர வாகனங்களுக்கு 12% விற்பனை வரியும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான இரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணம் ஆகும் என வேலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment