மணல் திருட்டில் ஈடுபட்ட வந்த இருவர் கைது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

மணல் திருட்டில் ஈடுபட்ட வந்த இருவர் கைது.


வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றில் இருச்சக்கர வாகனத்தில் அடிக்கடி மணல் கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட எஸ். பி மணிவண்ணனுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் உத்தரவின் பேரில் விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் தலைமையிலான போலீசார் காங்கேயநல்லூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது காங்கேயநல்லூர் பாலாற்று படுகையில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்த ர வினோத் (வயது 27) மகன் திலீப் (வயது 25) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad