வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அருகே அல்லிவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 50) இவரது மகன் விஜயகுமார் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். விஜயகுமார் மாட்டு கொட்டகையில் இருந்த சானியை நிலத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அங்கிருந்து மின்கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததால், விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த அவரது தாய் செந்தாமரை மகனைக் காப்பாற்ற கீழே தள்ளிவிட்டார். அப்போது செந்தாமரை மீதும் மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment