வேலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் அ.சேகர் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.தீனதயாளன் ஜிடி.பாபு, ஆர் எஸ்.அஜுஸ்குமார், எஸ்.ராமன் உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையினை ஏற்று நாளை 14.10.2023 அன்று விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான மீள் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment