வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 October 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள்  குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு வட்டாட்சியர் சித்ராதேவி அவர்கள் தலைமை தாங்கினார்.
துயா் துடைப்பு வட்டாட்சியர் சரவணன்
வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன்
தலைமை நில  அளவா்
ராஜ்குமார் வனத்துறை அலுவலர் மாசிலாமணி
வருவாய் ஆய்வாளர்கள் பலராமன் பாஸ்கர் எஸ்வந்தர்
விவசாய சங்க பிரதிநிதிகள் சாமிநாதன் துரை செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


பல்வேறு வடிவங்களில் பல
கட்ட போராட்டங்கள் நடத்தியும் மனுக்கள்
கொடுத்து போராடியதற்கு கிடைத்த வெற்றியாகும்.


குடியாத்தம் கங்கை அம்மன் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டுமான பணியை துவங்கியதற்கும்.


முப்பது கண்ணு ரயில்வே பாலம்
வழியாக ஆலம் பட்டறைக்கு செல்லும் வழியில் ஆறுகளின் இருபுற கரைகள் சென்ற முறை பெய்த மழை வெள்ளத்தில் அடித்து சென்றதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது.தற்போது கரைகளை பாதுகாக்கும் வகையில் தடுப்பு சுவர் கட்டுமான பணி துவங்கியதற்கும்.


செட்டிகுப்பம் ஆதி திராவிட உயர்நிலை பள்ளிக்கு ஏழு வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி துவங்கியதற்கும்
தமிழ் நாடு அரசுக்கும்
மாவட்ட நிர்வாகத்திற்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


அகரம்சேரிக்கும் மேலாளத்தூர்க்கும் இடையே ஆற்று பாலத்தை போர்கால நிலையில் கட்டப்படவேண்டும்.
மாதனூர் பாலத்தை உயர் மட்ட பாலமாக கட்ட வேண்டும்.


கலைஞர் மகளீர் உரிமை தொகை தகுதி உள்ளவர்களுக்கு கிடைக வில்லை அதிகாரிகள் முறையாக பாரபட்சமின்றி ஆய்வு செய்து உரிமை தொகை கிடைத்திட முனைப்புடன் செயல்படவேண்டும்.


குடியாத்தம் ஓட்டேரி ஏரியின் மதகுகள் சென்ற முறை பெய்த மழையில் உடைப்பு ஏற்பட்டது அதை  உடனடியாக கட்டி முடிக்க வேண்டும்.


வனவிலங்குகளால் உயிர் சேதம், பயிர் சேதம், ஏற்படுகிறது. இதை தடுத்து, விவசாயத்தையும், விவசாயிகளையும்,
வனவிலங்குளையும், பாதுகாக்கும் வகையில் கோட்டாட்சியர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அடங்கிய கூட்டத்தை மாதம் ஒரு முறையாவது கூட்ட வேண்டும்.


கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. தற்போது உணிக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது இதை தடுக்க ஊராட்சிகள் தோறும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.


பருவ நிலை மாறுவதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, மெட்ராஸ் ஐ, போன்ற நோய்கள் வெகுவாக பரவி வருகிறது இதை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.


இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கை மனுவை அளித்து பேசினார்கள் இறுதியாக வட்டாட்சியர் பேசுகையில் முடந்த வரை கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad