வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை மலை கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தி சார்பில் ரூ.4.50 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட 4 அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல்பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று திறந்து வைத்து பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்/ திட்ட குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன், ஒன்றிய குழு உறுப்பினர் இராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரேகா ஆனந்தன் லதாராஜசேகரன், இரவி, தமிழ்நாடு அரசு பழங்குடியின அலுவல் சாரா உறுப்பினர் விஜயன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) சுஜாதா, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பிரேம் ஆனந்த், வெங்கட்ராமன், தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment