வேலூர் மாவட்டம், கே வி குப்பம் ஒன்றிய விஸ்வ இந்து பரிசத் சார்பில் செவ்வாய்க்கிழமை ( 21.11.2023) காலை 10:00 மணி அளவில் கீழ் ஆலத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கோ அஷ்டமியை முன்னிட்டு கோமாதா பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விசுவ இந்து பரிசத் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் ஆர் அண்ணாமலை அவர்கள் தலைமை தாங்கினார். சந்தோஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கோ பூஜையை வேலூர் கோட்ட பொறுப்பாளர் திருமாவளவன் ஜி கீழ் ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் மாவட்ட பஜ்ரங்கங்கள் தலைவர் சதீஷ்குமார் நகரத் தலைவர் ராம சரவணன் கோ ரக்ஷா நகர தலைவர் சந்திரசேகர் நகர துணை தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிமாறன் பச்சையப்பன் மாத்துரு சக்தி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிவில் மாநகரச் செயலாளர் ஜெகதீசன் ஜி அவர்கள் நன்றியுரை கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment