வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை ஏற்றி செல்ல ரோட்டரி கிளப்புக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மது போதையில் இருப்பதாக போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனே போக்குவரத்து போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை செய்தார்கள், அதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக தெரியவந்தது, உடனே அங்கிருந்து ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.
போக்குவரத்து போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், தப்பி ஓடிய ஆம்புலன்ஸ் டிரைவர் பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநர் மது போதையில் இருப்பது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி.ராஜேந்திரன்

No comments:
Post a Comment