வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ அபிராமி பள்ளியின் 3 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி வளாக விளையாட்டு திடலில் சனிக்கிழமை (நவம்பர் 25) நடத்தப்பட்டது. தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைவர் ஜோதி குமார் ஐயா, துணைத்தலைவர் எம். பிரகாசம், பொருளாளர் கே. முருகவேல், பள்ளியின் இயக்குனர் சுமிப்பிரியா மற்றும் பள்ளி அறங்காவலர்கள் ஜோதிராம் கலந்து கொண்டனர். பள்ளி தலைவர் ஜோதி குமார் ஐயா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி ஆங்கில துறை ஆசிரியை கனிமொழி தொகுப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் லெதா ஜேக்கப் அவர்கள் ஒருங்கிணைந்து இனிதே விழா முடிவடைந்தது. அறிவியல் துறை ஆசிரியர் திரு.ஆன்டோ ஜான் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment