இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேர்ணாம்பட்டு கிளையின் சார்பில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பு தொடக்கம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 25 November 2023

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேர்ணாம்பட்டு கிளையின் சார்பில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பு தொடக்கம்.


வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளாக உள்ள பல்வேறு அமைப்புகளில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பும் ஒன்றாகும் இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  நிகழ்விற்கு பேர்ணாம்பட்டு ரெட்கிராஸ் சங்க செயலாளர் பொன்.வள்ளுவன் தலைமை தாங்கினார்.
  

பள்ளி தலைமையாசிரியர் ப.கமலக்கண்ணன் வரவேற்று பேசினார்.  பேர்ணாம்பட்டு ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் த.முத்தரசன், துணைத்தலைவர் கோ.ரவி, ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மாணவர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கி பள்ளி அமைப்பினை தொடக்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது,  இந்த அமைப்பின் கொள்கைகளாக சுகாதாரம் சேவை நட்பு என்ற அடிப்படையில் மாணவர்கள் காலை உணவு தவிர்க்கவே கூடாது மேலும் நாம் ஆராக்கியமாக இருந்தால் தான் சேவை செய்யமுடியும் எனவே நம் ஒவ்வொருவரின் ஆராக்கியம் முக்கியம் எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க சரிவிகித உணவினை உட்கொள்ள வேண்டும் முடிந்த சேவைகளை செய்வோம் நல்ல நட்பினை பெறுவோம் பள்ளியில் கல்வி இணை செயல்பாடுகளில் பங்கேற்போம் அதே வேளையில் கல்வியிலும் அதிக கவனம் செலுத்துவோம் என்றார்.  


இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேர்ணாம்பட்டு கிளையின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் திரு.செ.நா.ஜனார்த்தனர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஜகுர் அஹ்மத், இப்திஹர் ஹக், ஆலியார் கிஜர் அஹ்மத், பாண்டியன் உட்பட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்புடன் இணைந்துள்ள மாணவ மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் உதவித்தலைமையாசிரியர் பி.தண்டபாணி நன்றி கூறினார். 


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad