குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியத்தில் சனிக்கிழமை காலை 10:00மணி முதல் 12 :30 மணி வரை ஓவிய போட்டி நடைபெற உள்ளதாகவும் ஓவிய போட்டியின் தலைப்பு வேலூர் மாவட்ட நினைவுச் சின்னங்கள் பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த ஓவிய போட்டியானது ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்காக நடத்தப்பட உள்ளது.
ஓவியத்தில் ஆர்வம் உள்ள மாணவ மாணவியர்கள் தங்களது பெயரை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்யும் கொள்ளுமாறு தெரிவித்தார். பெயர்களை பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே ஓவிய போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் பள்ளி ஒன்றுக்கு மூன்று மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
ஓவியப் போட்டியை காண ஓவிய தாள் மட்டுமே அருங்காட்சியகத்தில் வழங்கப்படும் .ஏனைய பொருட்கள் மாணவர்களே கொண்டு வர வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment