வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ பட்டமளிப்பு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 20 November 2023

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ பட்டமளிப்பு விழா.


வேலூர் மாவட்டம் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியின் முதுகலை மருத்துவ பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவ கல்வி வாரிய தலைவர் டாக்டர் விஜய் பூஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வேலூர் பாகாயம் ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் மருத்துவ பட்டம் பெற்ற 220 முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பட்டம் பெறுகின்ற மருத்துவர்கள் சிஎம்சி யின் கொள்கைக்கு இனங்க சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு உத்தமத்தையும் இரக்கத்தையும் அறபணிப்பையும்  வெளிப்படுத்த வேண்டும். என்று முதல்வர்  பேசினார்.


புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கும் ஆர்வம் ஒருபோதும் உங்களில் ஓயக்கூடாது என்று குறிப்பிட்டார் உயர்தர மருத்துவத்தை அளிக்க எப்போதும் பாடுபட வேண்டும் என கூறினார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad