குழந்தைகள் உரிமை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 21 November 2023

குழந்தைகள் உரிமை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்.


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு குழந்தைகள் உரிமை தினத்தை முன்னிட்டு செவிலியர் மாணவிகள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். பேரணாம்பட்டு   டிநெட் கல்வி நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் நாயகி நர்சிங் இன்ஸ்டியூட்டில் குழந்தைகள் உரிமைகள், குழந்தை திருமணம் குறித்து  விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

இதில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர்  பிரியா  தலைமை தாங்கினார் ,  ஹேண்ட் இன் ஹேண்ட்   மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  சாம்ராஜ் வரவேற்றார்.


ஒருங்கிணைப்பாளர் பைரவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  பணியாளர் அருள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர், சமூக நலத்துறை விரிவு அலுவலர் தனலட்சுமி, ஊர்நல அலுவலர்  முனிலட்சுமி   ஆகியோர் பெண் கல்வி விழிப்புணர்வு குறித்து பேசினார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை டீனர்ட் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ் பிரசாத் குமார் செய்திருந்தார் நிகழ்ச்சி இறுதியில் நர்சிங் கல்லூரி இயக்குனர் நரேந்திர குமார் நன்றி தெரிவித்தார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad