காட்பாடி அடுத்த கரசமங்கலம் வருவாய் கிராமமானது கலசமங்கலம் சிங்காரவேட்டியூர், கொட்டிகுப்பம், முஸ்லிம் காலனி, இந்திரா நகர், கரசமங்கலம் கூட்ரோடு, மோட்டூர், கீழ் ரங்கநாதபுரம், மேல் ரங்கநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களை உள்ளடக்கியது.
வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட விஏஓ அலுவலகம் கரசமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்பொழுது சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான அலுவலகப் பணிக்காக வரும் மக்கள் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் அச்சத்துடன் அமர்ந்து செல்கின்றனர்.
அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன்பு இடிந்து விடும் நிலையில் உள்ள கட்டிடத்தை முழுவதும் தரைமட்டமாக இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment