வாசகர் வட்டம் சார்பில் புத்தகக் கண்காட்சி துணை மேயர் துவக்கம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 30 December 2023

வாசகர் வட்டம் சார்பில் புத்தகக் கண்காட்சி துணை மேயர் துவக்கம்.


வேலூர் மாவட்டம் காட்பாடி இன்றும் நாளையும் வாசகர்  வட்டம் சார்பில் புத்தக கண்காட்சி வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம் சுனில் குமார் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி புத்தகாலயம் மின் சிறகுகள் கலைக்குழு மற்றும் காட்பாடி வாசகர் வட்டம் இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தினர்.


இந்த புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நேதாஜி தலைமை தாங்கினார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காட்பாடி செயலாளர் லோ நவீன் வரவேற்று பேசினார்.

ஜெகன் சங்கர் துர்கா சுடரொளியன் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநகராட்சியின் துணை மேயர் எம் சுனில் குமார் புத்தக கண்காட்சியினை துவக்கி வைத்து பேசினார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ் சுரேந்திரன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தர்மன் தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம் எஸ் கஜராஜ் மாவட்ட தலைவர் திலீபன் துணைத் தலைவர் எல் எம் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்தி பேசினார் பொருளாளர் எம் சின்னதுரை நன்றி கூறினார்.


இந்த புத்தகக் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது காட்பாடி காந்திநகர் எல்ஐசி அலுவலகம் எதிரே இதற்கான கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சி அரங்கில் 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன பாரதி புத்தகாலயத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஆர் சாவித்திரி அம்மாள் நினைவாக இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.


புத்தகங்களோடு புத்தாண்டினை வரவேற்போம் வாசிப்போம் நேசிப்போம் என்கின்ற உரத்த சிந்தனையோடு இந்த கண்காட்சையானது நடைபெறுகிறது அனைவரும் வருகை தந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்று பயன் பெறுமாறு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் விவரங்களுக்கு 94438 78852 மற்றும் 89034 46188 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம் என தெரிவித்தனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad