வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி பகுதியில் புதியநீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏசி. சண்முகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இல்லம் தேடி மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சியின் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் இரா சி.தலித் குமார் குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.

உடன் பாதிரியார் பிஷப்நோவா, புதிய நீதி கட்சியின் ஐடிவிங் மாவட்டசெயலாளர் பாரத் பிரவீன் குமார் ஹரிஷ் இளஞ்செழியன் ஹரிபாபு தென்காந்தி கோடீஸ்வரன் ஏசிஎஸ் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர் இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். அனைவருக்கும் மதிய உணவு (2024) ஆண்டிற்கான தினசரி காலண்டர் வழங்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment