பாராளுமன்றத்தில் நடைபெற்ற வண்ணப் புகை குண்டு தாக்குதல் குறித்து விவாதம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 December 2023

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வண்ணப் புகை குண்டு தாக்குதல் குறித்து விவாதம்.


வேலூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி  சார்பில்  பாராளுமன்றத்தில் நடைபெற்ற வண்ணப் புகை கொண்டு தாக்குதல் குறித்து விவாதம் நடத்த கோரிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து ஜனநாயக படுகொலை செய்த பாசிச பாஜக அரசைக் கண்டித்து, வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் இன்று 22.12.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தேவகிராணி ராஜேந்திரன், நீலகண்டன், காமராஜ், சரவணன், சான்பாஷா, MD ராகீப், ஆனந்தவேல், உவைஸ் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் விஜயேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மாநில பேச்சாளர் நாட்டாம்கார் அக்பர், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்  கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட நிர்வாகிகள் சேகரன், பாரத் நவீன்குமார், குடியாத்தம் தெற்கு வட்டார தலைவர் ஜோதி கணேசன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சங்கர், செல்வகுமார், பெரியசாமி, தனசேகர், விஜயகுமார், லோகிதாஸ், தாண்டவமூர்த்தி, பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹ்மத், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹிர், மாவட்ட கலைப்பிரிவு தலைவர் காத்தவராயன், மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, மற்றும் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் முனைவர் நவீன்பிரபு, இலியாஸ் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad