காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 75வது குடியரசு தின விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 January 2024

காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 75வது குடியரசு தின விழா.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் காந்திநகர் மாவட்ட கிளை நூலகம் இணைந்து 75வது குடியரசு தின விழா 26.01.2024  அன்று காலை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.  

சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். நல்நூலகர் தி.மஞ்சுளா வரவேற்று பேசினார். வாசகர் வட்ட தலைவர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர் எ.ஶ்ரீதரன் தேசிய கொடியினை எற்றிவைத்தார். செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு முன்னிலையில் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, பொருளாளர் வி.பழனி,  மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

 

முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலகத்தில் 75வது குடியரசு தின விழா, வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலகத்தில் 69வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.  பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் உறுப்பினர்கள் பி.என்.ராமச்சந்திரன், எஸ்.ரமேஷ்குமார்ஜெயின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.   

 

காட்பாடி துளிர் பள்ளியில் 75வது குடியரசு தின விழா:

காட்பாடி துளிர் பள்ளியில் 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை த.கனகா தலைமை தாங்கினார்.  பள்ளி தாளாளர் வி.பழனி தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.  அறங்காவலர்கள் எம்.சுவாமிநாதன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad