வேலூர் மாவட்ட காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று 75வது குடியரசு தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை கோ.சரளா தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். வேலூர் மாநகராட்சியின் ஒன்றாவது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடியரசு தின உரையாற்றினார்.
முன்னதாக பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா மகேந்திரன், சித்ரா லோகநாதன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் லோகநாதன், மகேந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் விமலா, துணைத்தலைவர் கௌதமி ஆகியோர் பேசினர்.
மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றது நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் இசை ஆசிரியை ஜெ.செலின் நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment