வேலூர் தொரப்பாடி ஏரியில் கடந்த 5.1.2024 அன்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் இறந்த கிடந்தார். அக்கம் பக்கம் விசாரித்து நிலையில் யார் என்று தெரியவில்லை, இந்நிலையில் அவரது உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சவ கிடங்கில் வைக்கப்பட்டது. விளம்பரம் கொடுக்கப்பட்டும் யாரும் தேடி வரவில்லை.
இதையடுத்து, வேலூர் பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேண்டுகோளின் பேரில் இறந்தவரின் உடலை சமூக சேவகர் எம்.கோபிநாத் வேலூர் மாநகராட்சியின் வழிகாட்டுதலின்படி உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்தார். பின்னர் அவர் தனது சொந்த செலவில் வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள பாலாறு இடுகாட்டில் (20.1.24) நல்லடக்கம் செய்தார்.
பெண்ணின் சடலம் நல்லடக்கம் செய்ய வேலூர் பாகாயம் போலீஸ் நிலைய காவலர் கதிர்வேல் அவர்கள் கோபிநாத்துக்கு உரிய சான்றுகளை வழங்கி உதவியாக இருந்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment