வேலைவாய்ப்பு முகாமில் 105 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் 3 ஆயிரத்து 815 பேர் பதிவு செய்து இருந்தனர். தொடர்ந்து அன்று மாலையே பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் 2270 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் பணிநியமன ஆனையை டாக்டர் எம்ஜிஆர் நிகழ்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் தலைவர் வேந்தர் டாக்டர் ஏசி.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு மேடையிலே 750 பேருக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏசி. அருண்குமார் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி செயலாளர் ஏசி. ரவிக்குமார் புதிய நீதி கட்சியின் மாவட்ட செயலாளர் பிரமாஸ் செந்தில் மாநிலத் தொண்டர் அணி செயலாளர் பட்டு பாபு மண்டல தகவல் தொழ்நுட்டபபிரிவு செயலாளர் பாரத் டி.பிரவின்குமார் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ்.ரமேஷ் கேவிகுப்பம் தொகுதி பொறுப்பாளர் பாரத் மகேந்திரன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் உள்பட பல கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்ஜிஆர் பல்கலைக்கழக இணை பதிவாளர் டாக்டர் மணிவண்ணன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் டாக்டர் சி. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர்கள் 120 மருத்துவ முகாம்கள் தொடர்ந்து பல்கலைக்கழக வேந்தர் ஏசிசண்முகம் பேசுகையில் ஏசிஎஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில்120 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன இதுவரை 90 ஆயிரம் பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் வேலூரில் நடந்த முகாமில் 5500 பேர் பதிவு செய்தார்கள் அதில் 120 நிறுவனங்கள் மூலம் 3,450 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. குடியாத்தத்தில் 150 நிறுவனங்கள் கலந்து கொண்டதில் 3815 நபர்கள் பதிவு செய்தார்கள் .இதில் 2270 பேருக்கு பணி நியமன ஆலைகள் வழங்கப்பட்டது. 2 முகாமிலும் மொத்தம் 6 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளோம் என்று பேசினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment