வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை பிறப்பு இறப்பு சரிபார்க்கும் பணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் சித்ராதேவி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பிறப்பு இறப்பு இணை இயக்குனர் சங்கர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார். மற்றும் கல்லபாடி சுகாதார ஆய்வாளர்கள் பிரகாசம் மற்றும் சரத்குமார் மேற்கு வருவாய் ஆய்வாளர் தங்கமணி கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2022-2023க்கான பிறப்பு இறப்பு பதிவு செய்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுபட்ட மனுக்களை உடனடியாக கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment