குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 23 January 2024

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்  செவ்வாய் கிழமை 23:01:2024 நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் மு. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். பாலாஜி வரவேற்றார் நிகழ்வில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் பேர்ணாம்பட் வேளாண்மை துறை அலுவலர் அஸ்வினி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவசங்கர் குடியாத்தம் வனவா் மாசிலாமணி வட்ட வழங்கல் துறை ஜோதி ராமலிங்கம் கல்லபாடி சுகாதார ஆய்வாளர் பிரகாசம் மற்றும் சரத்குமார் பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.


குடியாத்தம் அடுத்த சைன குண்டா பகுதியில் குரங்குகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குடியாத்தம் பகுதியில் நிறைய பொதுமக்களுக்கு வரவில்லை புதியதாக முகாம் ஏற்படுத்தி மணுக்கல் பெற வேண்டும் என்றும் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கு தண்ணீர் முழுமையாக வர வழிவகை செய்ய வேண்டும், குடியாத்தம் அரசினர் கலை கல்லூரியில் எஸ்சி எஸ்டி மாணவ மாணவியர்களுக்கு போதிய ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும், மோர்தானா பகுதிக்கு செல்லும் அரசு பேருந்து சைன குண்டா வரை சென்று மோர்தனா செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு வருவதை தடை செய்யும் வகையில் சைரன் ஒலி கருவி அமைக்க வேண்டும், குடியாத்தம் பெரும்பாடி மூங்கப்பட்டு பகுதியில் செக் டேம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்தார். இதில் குடியாத்தம் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் பகுதிகளிலிருந்து விவசாயிகள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad