வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட விளக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ஜெனரல் விஜய் குமார் சிங் அவர்களுக்கு குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராம ஊராட்சி மன்றம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் பெரும்பாடி கிராம ஊராட்சிமன்ற தலைவர் ஆஷாதேவி செழியன், பெரும்பாடி கிராம மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் சார்பாக கண்ணபிரான் ஆகியோர் மத்திய அமைச்சருக்கு சால்வை அணிவித்து சந்தன மாலை சூட்டி வரவேற்பு செய்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். குடியாத்தம் வட்டம் அக்ராவரம் ஊராட்சியில் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம். மற்றும் ஐத்ராபாத் விவசாய தொழிநுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் வந்திருந்த போது இந்நிகழ்வு நடை பெற்றது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment