காட்பாடியில் மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 12 January 2024

காட்பாடியில் மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் காட்பாடி மின் பகிர்மான வட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் காட்பாடியில் நேற்று நடைபெற்றது. இதில் மேற்பார்வையாளர் மதியழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் முன்னிலை வகித்தார். இதில் விரிஞ்சிபுரம் பகுதியில் இடையூறு இல்லாமல் மின் கம்பங்களை அமைத்து தர வேண்டும்.ஊசூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். அங்கு கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் மின்புகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவே அதிகாரிகள் இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மும்முனை மின் சப்ளை வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர். 


தொடர்ந்து வேலூர் ஆர் என் பாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த மின் சப்ளை வருகிறது. அதை சீர் செய்ய வேண்டும் என்று அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நேற்று ஐந்து மனுக்கள் பெறப்பட்டது இந்த கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad