இவர் திறமையை ஏற்றுக் கொள்ளாத ஒரு சில நபர்கள் இந்தக் கூட்டத்தில் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு கூச்சல் குழப்பம் செய்தனர். அதற்கு தலைவர் பி ராகேஷ் அவர்கள் தன்னுடைய சொந்த பிரச்சினை அல்லது மற்ற எந்த கேள்வி எதுவாக இருந்தாலும் தலைவர் அலுவலகம் வந்து பேசுங்கள். இது கிராமசபை கூட்டம் என தெரிவித்தார்.
எனவே மக்களின் அடிப்படைத் தேவை சாலை மற்றும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சொல்லுங்கள் அதை நான் உடனடியாக சரி செய்து தருகிறேன். மற்ற தேவையற்ற வார்த்தைகளை பேசி நேரத்தை வீண் செய்யாதீர்கள் என ஆவேசப்பட்டார்.
அதற்கு அவர்கள் கலந்து பேசி குறைகள் ஏதும் இல்லாததால் மெதுவாக கலைந்து சென்றனர். மேலும் கூட்டத்தில் தலைவர் திரு பி ராகேஷ் அவர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்ந்து சாலையில் உள்ள குப்பை மற்றும் தெருவிளக்கு கால்வாய் இவைகள் மிகச் சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சுத்தம் செய்ய வேண்டும். வண்டந்தாங்கல் பஞ்சாயத்து ஒரு எடுத்துக்காட்டு ஊராட்சியாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் தலைவர் பி ராகேஷ் துணை தலைவர் முத்துலட்சுமி குமார் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பிரிஸ்கில்லா ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மற்றும் செயலாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment