வேலூர் மாவட்டம் குடியாத்தம் மீரான் நகர் பகுதியை சேர்ந்தவர் முனவர் (வயது55) இவர் அதே பகுதியில் குடோன் வாடகை எடுத்து பந்தல் சமையல்க்கு தேவையான பாத்திரங்கள் வாடகை விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு குடோனை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலை வழக்கம் போல் குடோனை திறந்தார், அப்போது மேற்கூறையில் உள்ள ஓடு சேதம் அடைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பீரோவில் வைத்திருந்த பணம் உள்ளதா என்று திறந்து பார்த்தபோது 68 ஆயிரம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் அதன் பெயரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment