வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 31 January 2024

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கிரி பாபு ஆட்டோ ஓட்டுநர் இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 27 ) இவருக்கு திவ்யஸ்ரீ (வயது 7) ஸ்ரீநிதி (வயது 6 )என்று இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த 6 மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் வலி அதிகமாக இருந்தது, வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட அவர் வீட்டின் மேற்கூறையில் உள்ள குடிசையில் புடவையால் தூக்கு மாட்டை தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு சென்ற டவுன் போலீசார் ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad