சட்டத்தில் அருணா ஸ்ரீயும், கவாத்தில் கனிமொழியும், துப்பாக்கி சுடுதலில் ஜனனியும் முதல் பரிசு வென்றனர் ஆல்ரவுண்டராக அருணா ஸ்ரீ வெற்றி பெற்று அவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன இவ்விழாவில் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர். இதில் ஐ.ஜி முத்துசாமி பேசுகையில் பிற்படுத்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வாழ்வில் மேண்மையுறும் வகையில் அனைத்து மக்களுக்காகவும் நீங்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பயிற்சி முடித்த பெண் காவலர்களிடம் பேசினார்.
இதில் ஐ.ஜி.ஆனிவிஜயா பேசுகையில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்கள் நீங்கள் பயிற்சியை பெற்றுள்ளது மிகுந்த சிறப்பானது தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்துள்ளனர். காவல் துறையில் எல்லா காவல் நிலையங்களிலும் தற்போது 50 சதவிகிதம் பெண் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் பெண் காவலர்கள் பெண்கள் குழந்தைகள் பிரச்சணைகளை நல்ல முறையில் கையாண்டு பிரச்சணைகளை தீர்வு காண்கின்றனர் எப்போதும் பெண் காவலர்கள் சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.


No comments:
Post a Comment