வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம் மேல்பட்டி உள் வட்டம் மொரசபள்ளி கிராமத்தில் இன்று காலை 9-30-மணியளவில் மொரசபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கரீம் என்பவரின் மகன் சா்தாா் (வயது 14) இருசக்கர வாகனத்தில் மொரசபள்ளி சென்று விட்டு வீடு திரும்பும் போது எதிரே நலங்காநெல்லுரை சோ்ந்த சரத் என்பவரின் மகன் சிவகுமார் என்பவர் டிராக்டரில் ஜல்லி பாரம் ஏற்றி வந்த போது சர்தார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அங்கிருந்தவர்கள் சிறுவனை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், ஆனால் சர்தார் செல்லும் மருத்துவனை செல்லும் வழியிலே உயிரிழந்து விட்டார். உடனடியாக தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் சிறிது நேரம் மொரசபல்லி to பரவகல் சாலையில் மசூதி தெரு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கலைந்து சென்றனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
.jpg)
No comments:
Post a Comment