வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம் ரோட்டரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் ரங்கா வாசுதேவன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கே எம் ஜி கல்வி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார், மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி மதியழகன் ராஜேந்திரன் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர், கண் சிகிச்சை முகாம் தலைவர் கண்ணன் வரவேற்றார். கண் சம்பந்தமாக கண்ணில் சதை வளர்தல் கண்ணில் புறை நீக்குதல் கிட்டப் பார்வை தூர பார்வை இவைகளை பரிசோதனை செய்தனர் இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக 82 பேர் தேர்வு செய்யப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment