ரோட்டரி சங்க தலைவர் அரங்கா எ.வாசுதேவன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சி.பி.மகாராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த, நகரமன்றத் தலைவர், எஸ்.சவுந்தரராஜன், முதியோர்களுக்கு துவட்டிக்கொள்ள பருத்தித் துண்டுகள் 41 பேருக்கும் வழங்கி, முதியோர் இல்லத்தில் உள்ள ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்து தர ஏற்பாடு செய்தார்.
முதியோர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 41 சோப்புத் துண்டுகளும், 41 கபசுரக் குடிநீர் பொட்டலங்களை மருத்துவப் பணி இயக்குனர் Rtn. PLN.பாபு, 41 மூலிகை பல்பொடிகளை நலம்பாரம்பரியம் Rtn. இராம.வேணுகோபால் ஆகியோர் வழங்கினர். ஆசிரியர் பரசுராமன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து சிறப்பித்த ரோட்டரி அனைத்துத் தூண்களுக்கும், உறுப்பினர்களுக்கும், நிகழ்ச்சிக்கு உதவி புரிந்த அனைவருக்கும் ரோட்டரி சார்பில் செயலாளர் Rtn. கே.எம்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment